brisbanetamilschool

36th Cultural Concert

Brisbane Tamil School’s 36th Kalai Vizha was held on 11th September 2021 at 4:15pm at Coorparoo Secondary College, corner of Stanley St east & Cavendish Road, Coorparoo QLD 4151.

கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த 36வது வருடாந்த கலைவிழா எங்கள் பாடசாலை மாணவர்களின்  தமிழ் மொழித் திறனை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வானது பெற்றோர்ஆசிரியர் மற்றும் நிர்வாக குழு உறுப்பனர்களின் ஒருங்கிணைந்த  கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.   இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில், மிகக்குறுகிய காலத்தில் இவ்விழாவுக்கு மாணவர்களை நேரம் பாராது ஆயத்தப்படுத்திய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்,  நலன்விரும்பிகளுக்கு எமது முதற்கண் நன்றிகள். இந்த குறுகிய தயார்படுத்தலில் எமது ஆசிரியர் குழாமுக்கு  பல வழிகளிலும்  உதவியும் ஒத்தாசையும் வழங்கிய மாணவர்கள்பெற்றோர்கள்நிர்வாக குழு உறுப்பினர்கள் ற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

இவ்வருட கலைவிழாவில் நூற்றிநாற்பதிக்கும் அதிகமான மாணவ மாணவியர் பங்குபற்றி  தமது தமிழ் மொழிப் புலமையாலும், கலை கலாச்சாரத் திறமையாலும் அரங்கத்தை அதிரவைத்தனர். இவ்வருட கலைவிழாவில் நமது பாரம்பரிய கலைகளாகிய கும்மி, காவடி நடனங்களுடன் நம் குழந்தைகளின் பேச்சுத்திறன், நடிப்புத் திறனை வளர்க்கும் நாடகங்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

இவ்வருடம் விழாவுக்கான  செயற்பாடுகள்  நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சில பெற்றோர்கள் மற்றும்   நலன் விரும்பிகளால்  சிறப்பாக  திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு  வெகு சிறப்பாக நடத்திமுடிக்கப்பட்டது. பாடசாலையின்  நிர்வாகக்குழு   சார்பாக உதவிய பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 

இக்கலை விழாவுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் (ஆலோசனை வழங்கிய, சரீர மற்றும் நிதி உதவி அளித்த, நடன அமைப்பு, மற்றும்   நாடகங்களை எழுதியவர்கள் என அனைவருக்கும் ) நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.


இவ்வருட கலைவிழா, மாணவர்கள்ஆசிரியர்கள்பெற்றோர்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனணவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த இன்னொரு வெற்றியாகும்.

Tags :