Lorem ipsum dolor sit amet, consectetur.
Lorem ipsum dolor sit amet, consectetur.
Lorem ipsum dolor sit amet, consectetur.
Lorem ipsum dolor sit amet, consectetur.
Vocal
Vocal
Guitar
1986ம் ஆண்டு மே மாதம் 32ம் திகதி பிறிஸ்பேனில் வாழ்ந்த ஒரு சில தமிழர்களால் எமது இளைய சமுதாயத்திற்கு தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக அயராத உழைப்பினால் பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை என்ற இந்த அறிவுபீடம் உருவாக்கபட்டது. பிறிஸ்பேன் பல் கலாச்சார திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த திருமதி டயானா பட்லர் அவர்களால் பிறிஸ்பேன் அரச உயர் பாடசாலையில் (Brisbane state High School) மங்கள விளக்கேற்றி தமிழ் வாழ்த்துடன் இந்த பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் பிரயாண வசதியை கருத்திற்கொண்டு, எமது பாடசாலை ஒக்ஸ்லி அரச உயர் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பிறிஸ்பேன் மட்டுமன்றி பிறநகர்களில் வாழ்ந்த தமிழர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க 1994ம் ஆண்டு முதல் முறையாக தபால் மூலமான கல்வி முறையை பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
பிறிஸ்பேன் வடபகுதியில் ர் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2000ம் ஆண்டு தமிழ்ப் பாடசாலையின் வட வளாகமொன்று மிச்செல்டன் (Mitchelton) அரச உயர் பாடசாலையில் ஆரம்பிக்கபட்டது. 2001ம் ஆண்டு முடிவில் ஒக்ஸ்லி அரச உயர் பாடசாலை மூடப்பட்ட காரணத்தால் 2001ம் ஆண்டு தை மாதத்திலிருந்து ஜிண்டலியில் அமைந்துள்ள சென்டினரி அரச உயர் பாடசாலைக்கு தமிழ் வகுப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டது.
பிறிஸ்பேன் தென்பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் , அங்கு வாழ்ந்த தமிழர்களின் வேண்டுகோளுக்கும் இணங்க 2001ம் ஆண்டு பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் இன்னுமொரு வளாகம் பிறிஸ்பேன் தென்பகுதியில் சனிபாங்க் உயர் பாடசாலையில் (Sunnybank State High School) ஆரம்பிக்கபட்டது. காரணத்திற்காக 2005ம் ண்டூ பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் முன்று வளாகங்களும் (சென்டினரி, மிச்செல்டன், சனிபாங்க்) ஒன்றிணைக்கப்பட்டு கிறிபித் (Grifith) பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டன. 2005ம் ஆண்டு மூன்றாம் பருவத்தில் கொலன்ட்பார்க் (Holland Park) அரச உயர்பாடசாலைக்கு பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை மாற்றப்பட்டு 17 வருடங்களாக இன்றுவரை ஒரேயிடத்தில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொற்கரையில் (Gold coast) தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2006ம் ஆண்டில் பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் பொற்கரை வளாகம் Southport State High School இல் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல் தூவூம்பா (Toowoomba) நகரிலும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அங்கு வாழும் மக்களின் நலனுக்காக 2012ம் ஆண்டு பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் தூவூம்பா வளாகம் Darling Heights State School இல்ஆரம்பிக்கப்பட்டு தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன.
லோகன் நகரில் (Logan city) வாழ்ந்த தமிழர்களுக்கு தூரப்பிரயாண வசதியில்லாத காரணத்தால் சிறிது காலம் லோகன் வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டது.
வருடா வருடம் தபிழ்ப் போட்டிகள் (பேச்சு, கவிதை, வாய்மொழித் : தொடர்பாற்றல், எழுத்து) நடாத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு இயல் இசை நாடகத்துக்கு பயிற்சிகள் கொடுத்து வருடாந்தக் கலைவிழாவை பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை நடத்தி வருகின்றது. மாணவர்களின் தமிழ்ப்பேச்சு வன்மையை மெருகூட்டவும், கலாச்சார உணர்வை வளர்க்கவும் இந்தக் கலை விழா உதவுகிறது. மாணவர்கள் முத்தமிழில் பல தரமான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை நடத்தி வரும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆரவத்துடனும் பங்கு பற்றி வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பிறிஸ்பேன் தமிழர்கள் அனைவரும் இணைந்து பங்கேற்கும் ஒரேயொரு விளையாட்டுப் போட்டியாக இது ஆரம்ப காலத்திலே இருந்து வருகின்றது. ஒளவை, கண்ணகி, மங்கை என்ற மூன்று இல்லத்துள் மாணவர்கள் பங்கு பற்றி தங்கள் இல்லங்களுக்கு பரிசு சேர்க்க முயற்சிப்பதை ஒரு இனிய அனுபவமாக மாணவர்களும் பெற்றோர்களும் கருதுகிறார்கள்.
– 30ம் ஆண்டு கலைவிழா சிறப்பு மலருக்காக முன்னாள் அதிபர் கலாநிதி செந்தில்வாசன்