வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே! (2 முறை)
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே! (2 முறை)
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே! (2 முறை)
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே! (2 முறை)
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே! (2 முறை)
தொல்லை வினைதரு தொல்லையகன்று
சுடர்க தமிழ்நாடே! (2 முறை)
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே! (2 முறை)
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! (2 முறை)
– மகாகவி பாரதியார்
இனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்
இளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம் (2 முறை)
எளிமையாக கற்றிட எழுந்து வாரும் பள்ளிக்கு
பழமை வாய்ந்த மொழியிது படித்திடுவோம் வாருங்கள் (2 முறை)
எங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே
பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே
இனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்
இளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம்
பலகலைகள் கற்றிட பறந்து செல்லும் நீங்களும்
சிலமணிகள் ஒதுக்குவீர் நம்மொழியை அறிந்திட (2 முறை)
புலம்பெயர்ந்த நாட்டிலும் பைந்தமிழை படித்திட (2 முறை)
கலகலவென தமிழ்மொழியை சரளமாகப் பேசிட (2 முறை)
எங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே
பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே
இனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்
இளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம்
எங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே
பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே (2 முறை)
(பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்காக எழுதியவர் – ஜீவன்செந்தில்வாசன்;
இசையமைத்தவர் – சாரதாஉதயசூரியன்)